கனடாவில் வருமான வரி ஆவணங்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகைதிக்குள் வரி குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கனடாவில் தற்பொழுது சுமார் 160000 அரச பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் கனடிய வருமான முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 39 ஆயிரம் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில் வரி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த கால அவகாசத்தை ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரையில் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கால எல்லையை நீடிக்கும் நோக்கில் மகஜர் ஒன்றில் கையொப்பங்களை திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 25 ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது