கனடாவில் வட்டி வீதம் பூச்சியம் தசம் ஐந்து வீதத்தினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய மத்திய வங்கியினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நாட்டின் பணவீக்க வீதம் வீழ்ச்சி அடைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் வட்டி வீத குறைப்பு தொடர்பில் மத்திய வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணவீக்கத்தை குறைப்பதனை விடவும் தற்பொழுது பணவீக்க நிலையை தளம்பாது பராமரிப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
பண வீக்கத்தை இரண்டு விதத்திற்கு குறைவாக பேணும் இலக்கினை கொண்டு கனடிய மத்திய வங்கி கொள்கைகளை வகுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தொடர்ந்து நான்காவது தடவையாக கனடாவில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.