கனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நிதி தகவல்கள் தொடர்பிலான பூரண கட்டுப்பாட்டை வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய மக்கள் மிக இலகுவாக வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலகுவான கொடுக்கல் வாங்கல் முறைமை, தானியங்கி கணக்கீடு மற்றும் வர்த்தக நிதி முகாமைத்துவம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளாகளின் கடன் புள்ளிகள் பற்றிய பின்னணியை நேரடியாக பார்வையிடக் கூடிய வகையில் புதிய நடைமுறகைள் முன்னெடுக்கப்பட உள்ளது.
எனினும் இந்த திறந்த வங்கி நடைமுறைகள் முழுமையாக அமுல்படுத்தப்படுவதற்கு சில காலம் தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வங்கித்துறையில் காணப்படும் போட்டியற்றத்தன்மையினால் கட்டணங்கள் கூடுதலாக அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.