Reading Time: < 1 minute

கனடாவில் லொத்தர் சீட்டு ஒன்றில் பரிசு வென்ற மூன்று நண்பர்கள் பரிசுத் தொகையை பிரித்துக் கொண்டுள்ளனர்.

கல்கரியைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இவ்வாறு 50 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளனர்.

லொட்டோ 6-49 ஜாக்பாட் பரிசு இவர்களுக்கு கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கார்மென் ஒஸ்ட்ரியா, கிரே பெர்கின்ஸ் மற்றும் கத்தரின் வோல் ஆகிய மூவரும் இரண்டு தசாப்த கால நண்பர்கள் மற்றும் முன்னாள் சக பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகள் ஒன்றாக லொத்தர் சீட்டிலுப்பில் ஈடுபட்டுள்ளனர்

இந்த மூவரும் 17 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் போட்டியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி நடைபெற்ற சீட்டிலுப்பில் மூவரும் பங்கேற்றனர்.

மூவரும் இணைந்து 10 டாலர் பெறுமதியான லொத்தர் சீட்டு ஒன்றை கொல்வனவு செய்திருந்தனர்.

லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றெடுக்க கிடைத்தமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பல்வேறு வழிகளில் இந்த பணத்தை காத்திரமான முறையில் செலவிட உத்தேசித்துள்ளதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று நண்பர்களுக்கும் தலா 16.6 மில்லியன் டாலர் பரிசுத்தொகை கிடைக்க பெற்றுள்ளது.