கனடாவில் லொத்தர் சீட்டில் பாரியளவு பணப்பரிசை வென்ற நபர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
63 வயதான ஜேன் லெமடாஜென் என்ற நபர் இவ்வாறு 40 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.
தமது லொத்தர் சீட்டை பார்த்தபோது தவறுதலாக தமக்கு வெற்றி எண்கள் காண்பிக்கப்படுவதாக ஜேன் கருதியுள்ளார்.
பின்னர் மீண்டும் தொலைபேசி செயலியை மூடி தொலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு தடவையும் ஒரே இலக்கங்களை கொண்டு இந்த லொத்தர் சீட்டில் விளையாடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒரே இலக்கங்களை தெரிவு செய்து விளையாடியதன் விளைவே இந்த பெரும் பரிசுத் தொகை கிடைக்க காரணம் என தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த ஜேன் அங்கிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
80 மில்லியன் டாலர் பரிசுத்தொகை இரண்டு வெற்றியாளர்களுக்கு இடையில் பகிரப்படுகின்றது.
இதன்படி ஜேனும், அல்பர்ட்டாவைச் சேர்ந்த மற்றும் ஒருவரும் இந்த பரிசுத்தொகையை தலா 40 மில்லியன் டாலர்கள் என்ற அடிப்படையில் பெற்றுக் கொள்ள உள்ளனர்.
நத்தார் பண்டிகைக்கு முன்னதாக இந்த பரிசுத்தொகை கிடைக்கப் பெற்றமை மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.