Reading Time: < 1 minute

வரும் வியாழக்கிழமை முதல், கனடாவில் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.

கனடா முழுவதிலும், சரக்கு ரயில்களை இயக்கும் சுமார் 9,000 ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுவருகிறார்கள்.

இதனால், சரக்கு ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆனால், இப்படி ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் ஏற்படும் இழப்பு, கனேடியர்கள் மீதுதான் சுமத்தப்படும் என பெடரல் அரசு எச்சரித்துள்ளது.

ரயில்கள், நாளோன்றிற்கு ஒரு பில்லியன் டொலர்கள் மதிப்புடைய பொருட்களை சுமந்து செல்கின்றன. நாட்டின் ஏற்றுமதியில் பாதி ரயில்கள் மூலமாகத்தான் நடந்துவருகிறது.

ஆக, ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம், கனேடிய பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கும் என தொழில்துறையினரும் எச்சரித்துள்ளார்கள்.

என்றாலும், தங்கள் கோரிக்கைகள் சந்திக்கப்படவில்லையானால், எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை என ரயில்வே ஊழியர்கள் யூனியன் கூறிவிட்டது.