கனடாவில் பரங்கி அல்லது மூலாம் பழம் உட்கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடிய பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சல்மொன்னெல்லா எனப்படும் பக்ரீறியா வகையின் தாக்கத்தினால் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும் இந்த வகை பக்ரீறியா தாக்கத்தினால் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலிசிட்டா (Malichita) மற்றும் ருடி (Rudy) ஆகிய பண்டக் குறிகளின் மூலம் சந்தையில் விற்பனை செய்யப்படும் பழ வகைகளினால் நோய்த் தொற்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ம் திகதி முதல் 14ம் திகதி வரையில் சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்ட பழ வகைகள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக், ஒன்றாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, நியூபவுண்ட்லாண்ட் மற்றும் பிரின்ஸ் ஒப் எட்வர்ட் ஆகிய பகுதிகளில் இந்தப் பழ வகைகளினால் நோய்த் தொற்று பதிவாகியுள்ளது.