கனடாவில் மூட்டைப் பூச்சிகள் மிகவும் அதிகமாக காணப்படும் மாகாணமாக ஒன்றாரியோ மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தின் ஐந்து நகரில் மிக அதிகளவான மூட்டைப் பூச்சிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய பூச்சி மற்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டு நிறுவனம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகவும் அதிகளவில் மூட்டைப் பூச்சிகள் காணப்படும் நகரங்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ரொறன்ரோ நகரம் ஏழாம் தடவையாக மூட்டைப் பூச்சிகள் அதிகளவாக காணப்படும் நகரங்களின் வரிசையில் முதலிடத்தை வகிக்கின்றது.
சட்பரி நகரம் இரண்டாம் இடத்தையும், ஒஷாவா மூன்றாம் இடத்தையும், ஹமில்டன் நான்காம் இடத்தையும் ஒட்டாவா ஐந்தாம் இடத்தையும் வகிக்கின்றன.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் வான்கூவார் நகரம் ஆறாம் இடத்தை வகிக்கின்றது.
டாக்ஸி, ரயில், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சாதனங்களில் மூட்டைப் பூச்சிகளை காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.