Reading Time: < 1 minute
கனடாவில் மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக றொரன்டோ நகரம் பெயரிடப்பட்டுள்ளது.
றொரன்டோ நகரம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக பூட்டை பூச்சி தொல்லை அதிகமான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடனாவின் பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனமான ஒர்கின் கனடா நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் மூட்டைப் பூச்சி கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பட்டியலில் றொரன்டோ முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பட்டியலில் முதலாவது இடத்தை றொரன்டோவும், இரண்டாவது இடத்தை வான்கூவாரும், மூன்றாவது இடத்தை சட்பரியும் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்தப் பட்டியலில் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த நகரங்களே அதிகளவில் முதல் பத்து இடங்களில் காணப்படுகின்றன.