கனடாவில் இந்த ஆண்டில் மீண்டும் பாலின் விலையை உயர்த்துவத்தற்கு பால் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணவீக்கம் காரணமாக ஆண்டின் நடுப் பகுதியில் பாலின் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டுமென பண்ணையாளர்கள் கோரியுள்ளனர்.
பால் உற்பத்தி செய்வதில் பண்ணையாளர்கள் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
உற்பத்திச் செலவுகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும், இதனால் விலையை உயர்த்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் ஒரு லீற்றர் பாலின் விலை எட்டு சதங்களினால் உயர்வடைந்தது எனவும், இது 8.4 வீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாலின் விலையை உயர்த்துவது குறித்து எதிர்வரும் 17ம் திகதி கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், மக்களினால் மற்றுமொரு விலை உயர்வினை தாங்கிக் கொள்ள முடியாது என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பால், முட்டை போன்ற பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதனால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.