Reading Time: < 1 minute

கனடாவின் வேலை வாய்ப்பு நிலையில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கனடிய பொருளாதாரத்திற்கு 35,000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக வேலையற்றோர் வீதம் 5 வீதமாக காணப்படுகின்றது.

தனியார் துறைகளில் அதிகளவில் புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, வர்த்தகம், களஞ்சியப்படுத்தல், நிதி, ரியல் எஸ்டேட், வாடகை மற்றும் குத்தகை துறைகளில் இவ்வாறு புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கனிம வளங்கள் மற்றும் கட்டுமான துறைகளில் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன.