Reading Time: < 1 minute

கனடாவில் மருந்துப் பொருட்கள் களவாடப்படுவதனை தடுக்கும் நோக்கில் புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் அமைந்துள்ள பல்வேறு மருந்தகங்களில் இவ்வாறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து களவுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2022ம் ஆண்டில் மருந்தகங்களில் மருந்துப் பொருள் கொள்வனவு பாரியளவில் அதிகரித்துள்ளது.

போதை தரக்கூடிய மருந்து வகைகளே அதிகளவில் இவ்வாறு கொள்ளையிடப்பட்டது.

எனினும் இவ்வாறு போதை தரக் கூடிய மருந்து வகைகள் களவாடப்படுவதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான ஒக்ஸிகோடொன், மோர்பின் மற்றும் கோடின் போன்ற மருந்து வகைகள் விசேட தொழில்நுட்பத்துடன் கூடிய பெட்டகமொன்றில் களஞ்சியப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பெட்டகத்தை மருந்தகத்திற்குள் பிரவேசித்த உடனேயே திறக்க முடியாத வகையிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இந்த கருவிகளைக் கொண்ட மருந்தகங்களில் களவுச் சம்பவங்கள் பாரியளவில் குறைந்துள்ளது.