Reading Time: < 1 minute

கனடாவில் மரக்கறி வகைகள் மற்றும் பழங்கள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்பில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பிளாஸ்டிக் பயன்பாட்டு கட்டுப்பாடு தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவும் இது நடைமுறை சாத்தியமற்றது எனவும் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகள் உற்பத்தியை செய்வோர் தெரிவித்துள்ளனர்.

சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரையறுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை அகற்றுவதனால் பொருட்களின் விலைகள் சுமார் 30 வீதத்தினால் உயர்த்தப்பட நேரிடும் எனவும் இது வாடிக்கையாளர்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.