Reading Time: < 1 minute

கனடாவில் மத்திய வகுப்பு குடும்பங்களுக்கு நலன்களை வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ம் திகதி கனடிய மத்திய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளது.

அடுத்த தலைமுறையினர் சிறந்த முறையில் வாழ்வதற்கான வழிகள் உருவாக்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகளவு வீடுகளை வேகமாக நிர்மானிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றியீட்டுவதற்கு அனைவருக்கும் சம சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலம் வலுவான கனடாவை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரவு செலவுத் திட்டம் செலவுகளை வரையறுக்கும் வகையில் அமையப் பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.