Reading Time: < 1 minute

கனடாவில் போலீசாரை போன்று போலி மின்னஞ்சல்கள் அனுப்பி வைக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய போலீஸ் உத்தியோகத்தர்களின் பெயர்கள் அவர்களின் பதவிகள் போன்றவற்றை குறிப்பிட்டு தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தனிப்பட்ட தகவல்கள் வருமான விபரங்கள் போன்றன திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீசார் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட தரப்பினர் இவ்வாறு மின்னஞ்சல்களை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இந்த தகவல்களை வழங்காவிட்டால் நடவடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுவதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள், நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் அவர்களுடைய சொத்து விபரங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ள இவ்வாறு போலீசாரை போன்று மின்னஞ்சல்களை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த எச்சரிக்கை தொடர்பில் பொதுமக்கள் அவதானம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.