Reading Time: < 1 minute

கனடாவில் போர்ட் (Ford) ரக வாகனங்களை பயன்படுத்துவோருக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் நிலை வாகன உற்பத்தியை நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்தின் பிக்கப் ரக வாகனங்களில் கோளாறு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வாகனங்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறாரை லட்சம் வாகனங்கள் இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் கனடியர்களினால் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனங்கள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் பழுது பார்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாகனங்களின் ஃபர்ஸ்ட் கியர் திடீரென மாறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேகமாக செல்லும் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு மாற்றமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

போர்ட் நிறுவனத்தின் F-150 pickups மாடல் வாகனங்களே இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வாகனங்கள் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கும்போது கியர்கள் தானாக மாற்றப்படுவது ஆபத்தானது எனவும் விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான வாகனங்களை பழுது பார்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வாகனங்களை மீள பெற்றுக் கொள்வதாக போர்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.