கனடாவில் பொருட்களின் விலைகளை குறைக்கும் முனைப்புக்களில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
நாட்டில் உணவு பணவீக்கம் வெகுவாக உயர்வடைந்து உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு பொருட்களுக்கான விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பிரதான மளிகை பொருள் நிறுவன நிறைவேற்று அதிகாரிகளை அரசாங்கம் சந்திக்க உள்ளது.
நாடாளுமன்றில் இந்த நிறைவேற்று அதிகாரிகள் பொருட்களின் விலை குறைப்பு குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.
உணவு பணவீக்கத்தை குறைப்பது தொடர்பில் நிறுவனங்களின் பரிந்துரைகள் இந்த சந்திப்பின்போது முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு எனினும் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் இதுவரையில் எந்த ஒரு நிறுவனமும் தெளிவான திட்டங்களை முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலைகுறைப்பு குறித்த பரிந்துரைகளை எதிர்வரும் நவம்பர் 2ம் திகதிக்கு முன்னதாக முன்வைக்க வேண்டும் என அரசாங்கம் நிறுவனங்களிடம் கோரியுள்ளது.