கனடாவில் பொருட்களின் அளவு குறைவது தொடர்பில் மக்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரிங்க்ளேஷன் எனப்படும் இந்த நிலைமை குறித்து பெரும்பான்மையான கனடியர்கள் கவலை கொண்டுள்ளனர்.
விலைகள் உயர்த்த படாது பொருட்களின் அளவு மட்டும் குறைக்கப்படும் நிலைமையே இந்த ஸரிங்க்லேஷன் என அழைக்கப்படுகின்றது.
இந்த நிலைமை குறித்து கனடாவில் அண்மையில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பிரபல கருத்துக்கு கணிப்பு நிறுவனமான Ipsos என்னும் நிறுவனம் இந்த கருத்து கணிப்பினை முன்னெடுத்துள்ளது.
கடந்த 19 மற்றும் 20ம் திகதிகளில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான கனடியர்கள் பொருட்களின் அளவு குறைதல், எண்ணிக்கை குறைதல் போன்ற ஏதுக்கள் தொடர்பில் அதிக கவலை கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் ஒரு பொருள் விற்பனை செய்யப்பட்ட தொகைக்கு கிடைக்கப்பெற்ற அளவினை விடவும் தற்பொழுது அளவு குறைவாகவே கிடைக்கப் பெறுகிறது என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அனேகமாக மளிகை பொருட்கள் விற்பனை என்பது இவ்வாறு பொருட்களின் அளவுகள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் மாற்றமின்றி, அளவில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் பண வீக்கம் காரணமாக கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மளிகை பொருட்களுக்கான செலவுகள் ஒரு வாரத்திற்கு 100 அமெரிக்க டாலர்களின் அதிகரித்துள்ளது.