Reading Time: < 1 minute

கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர் தங்களது உணவை வரையறுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் சுமார் 25 வீதமான பெற்றோர் இவ்வாறு தங்களது உணவு நுகர்வை வரையறுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பெற்றோரினால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பெற்றோர் தங்களது உணவு நுகர்வை வரையறுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

பெரும்பாலான கனடியர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் தங்களது பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சால்வேஷன் ஆர்மி என்ற அமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சுமார் 24 வீதமான பெற்றோர் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் நோக்கில் தங்களது உணவு நுகர்வை வரையறுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.