Reading Time: < 1 minute

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக கனடாவில் புதிய fentanyl tsar நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (Tariffs) விதிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய Fentanyl Tsar நியமித்துள்ளார்.

இந்த பொறுப்பில், Royal Canadian Mounted Police முன்னாள் உறுப்பினர் மற்றும் பிரதமரின் உளவுத்துறை ஆலோசகராக இருந்த கெவின் ப்ரோசோ (Kevin Brosseau) உடனடியாக பணியாற்ற தொடங்குவார்.

Fentanyl Tsar நியமனம் மூலம், கனடா-அமெரிக்க எல்லையில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

இதற்காக, புதிய கருப்புநிற Black Hawk ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் 10,000 எல்லைப் பாதுகாப்பு வீரர்களை பயன்படுத்தி கண்காணிப்பு வலுவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப், கனடாவில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், 2024 பிப்ரவரியில், கனடாவுடன் செய்த புதிய ஒப்பந்தத்தின் பேரில் இந்த முடிவை 30 நாட்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதற்கிடையில், 12 மார்ச் முதல் உலகம் முழுவதும் இருந்து வரும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது, அமெரிக்காவுக்கு மிக அதிக அளவில் எஃகு மற்றும் அலுமினிய ஏற்றுமதி செய்யும் கனடாவுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதற்கு எதிராக, கனடாவின் 13 மாகாண தலைவர்களும் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, இந்த வரிகளை அமுல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.