கனடாவில் இட்டோபிகோக் பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் பெருமளவிலான போலி உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 2 மில்லியன் டாலர் பெறுமதியான போலி உற்பத்திகள் இந்த கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் நிலை பண்டக் குறிகளை கொண்ட ஆடைகள் இந்த விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு உயர் தரத்தினையுடைய பண்டக்குறி பெயர்களில் விற்பனை செய்யப்பட்ட ஆடைகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது.
போலீசார் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
இட்டோபிகொக் பகுதியில் கிப்ளிங் மற்றும் குயின்ஸ் வேர் வீதிகளுக்கு அருகாமையில் “Brands Gone Wild” என்ற இந்த ஆடையகம் அமைந்துள்ளது.
Nike, Puma, Tommy Hilfiger, and Calvin Klein போன்ற பண்டக்குறிகளைக் கொண்ட உறபத்திகள் இந்தக் கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த மோசடியுடன் தொடர்புடைய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.