கனடாவில் பாரியளவில் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
மிஸ்ஸிசாகாவைச் சேர்ந்த 57 வயதான நபர் ஒருவருக்கு எதிராக இந்த மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடன் அட்டை நிறுவனமொன்றுக்கு இந்த நபர் ஒரு மில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடி தொடர்பில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கடன் பெற்றுக்கொள்ளக்கூடிய தொகையை மோசடியாக அதிகரித்து பாரியளவில் கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகத் ரதெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், கடன் அட்டை நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் டொலருக்கு மேல் செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசடியுடன் தொடர்புடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.