Reading Time: < 1 minute
கனடாவில் பாடசாலைக்கு எதிரில் மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தரம் 10ல் கல்வி கற்ற மாணவன் ஒருவனே நேற்று (Feb 16, 2023) இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளான்.
றொரன்டோவின் வெஸ்டன் பகுதியில் பகல் போசன விடுமுறையின் போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாணவன் பாடசாலையை விட்டு வெளிய வந்ததாகவும், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று மாணவனின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய மாணவன் காயத்துடன் பாடசாலை நோக்கி ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக பாடசாலை சில மணித்தியாலங்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.