Reading Time: < 1 minute
கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்ற பஸ் விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றும் டிடிசி பஸ் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டபின் மற்றும் யோர்க் டேல் வீதிகளுக்கு அருகாமையில் பனி படர்ந்த பாதையில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்தினால் விபத்தை ஏற்பட்டது என்பது பற்றி விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் சீரற்ற காலநிலையினால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.