கனடாவின் புள்ளி விபரவியல் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த ஜூன் மாதத்திற்கான பணவீக்க வீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ஜூன் மாத பணவீக்கமானது இரண்டு தசம் எட்டு வீதம் என புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.
எரிபொருளுக்கான விலை குறைப்பு இந்த பணவீக்க வீழ்ச்சியில் முக்கிய தாக்கத்தை செலுத்தியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் மளிகை பொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 9.1 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
இது கடந்த மே மாதத்தை விடவும் சிறிதளவான அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய மாதங்களில் தொடர்ச்சியாக கனடாவில் மளிகை பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் தொடர் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.