கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த சிரேஸ்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பக்க சார்பான முறையில் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், உறவினர் ஒருவருக்கு சார்பான வகையில் தனது கடமையை சரிவர செய்ய தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றின் போது குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பக்கச் சார்பாக செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் ஜாய்ஸ் சர்டர்ஸ் என்ற உத்தியோகத்தரே இவ்வாறு பக்கச் சார்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இந்த வாகன விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் வாகன விபத்தில் தொடர்புபட்டிருந்த நிலையில் பொலிஸார் பூரண விசாரணைகளை நடத்த முன்னதாகவே விபத்துடன் தொடர்புடைய சாரதியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் என தெரிவிக்கப்படுகிறது.
தொழில் ஒழுக்க நெறிகளை மீறி இவ்வாறு குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டுகளை அந்தப் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் நிராகரித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகளின் போது கடமை தவறிய விடயம் தெரிய வந்துள்ளது.