கனடாவில் பெண் ஒருவர் தனது வீட்டு நீர்க்கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
கனடாவின் சஸ்கட்டூன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பெருந்தொகை நீர்க்கட்டணப் பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தப் பெண்ணின் நீர்க் கட்டணம் 33500 டொலார்கள் என பதிவாகியுள்ளது.
நகர நிர்வாகம் தம்மிடம் கொள்ளையடிப்பதாக உணர்வதாக அந்தப் பெண் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதனை ஓர் மோசடியாகவே கருத வேண்டுமெனவும், இவ்வளவு பாரிய தொகை கட்டணம் எவருக்கும் வந்திருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நான்கு ஆண்டுகளாக குறிப்பிட்ட விலாசத்தில் நீர்க் கசிவு காணப்பட்டதாகவும் இதனால் பாரியளவு தொகை கட்டணம் அறவீடு செய்ய நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டின் மேல் மாடி கழிவறையில் ஏற்பட்டிருந்த நீர்க் கசிவினால் இந்த இவ்வாறு பாரிய தொகை நீர்க்கட்டணப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.