Reading Time: < 1 minute

கனடா நாட்டிற்கு படிப்புக்கான விசாவில் சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

கனடாவில் படிப்புக்கான விசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண் படித்து வந்துள்ளார்.

இவரது தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் வேலைக்காக சென்றுள்ளார். பல ஆண்டுகளாக அந்நாட்டிலேயே அவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், தனது நண்பர்களுடன் கனடாவில் உள்ள புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சிக்கு பூனம்தீப் கவுர் சென்றுள்ளார்.

இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில், பூனம்தீப் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்ற நிலையில் திடீரென வழுக்கி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளார்.

இதனை கண்ட அவருடன் சென்றவர்கள் பதறி உள்ளனர். இருப்பினும், அவரை காப்பாற்ற முடியாத நிலையில் பூனம்தீப் பரிதாபமாக உயிரிழ்ந்துள்ளார்.

இந்த தகவல் தூதரகம் வழியே பூனம்தீப்பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் மீட்கப்பட்டு விட்டதா? இல்லையா? என்ற விவரங்கள் வெளிவரவில்லை. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.