Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த 2025-ஆம் ஆண்டிலும் நாட்டின் பிறப்பு விகிதம் சாதனை அளவுக்குக் குறைவான நிலையிலேயே தொடர்வதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

அதேசமயம், குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மார்களின் சராசரி வயது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கனடா புள்ளிவிவரத் துறையின் அண்மைய தரவுகளின்படி, ஒரு பெண் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை 1.26 ஆக உள்ளது.

இது 2024-இல் பதிவான குறைந்த அளவிலேயே மாற்றமின்றி தொடர்கிறது. பெரும்பாலான மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களும் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தையே பதிவு செய்துள்ளன.

உலகளவில் 20 தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் வருமானம் கொண்ட நாடுகளில், குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் கனடா 7-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 1.57 குழந்தைகளுடன் அதிகபட்சமாகவும், தென் கொரியா 0.80 உடன் மிகக் குறைந்த அளவிலும் உள்ளன.

2025-ஆம் ஆண்டில் குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மார்களின் சராசரி வயது 31.9 ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இது 1976-இல் 26.7 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வயது அதிகரிக்கும்போது கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படுவதும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதாரச் சுமை, மாறுபட்ட வாழ்க்கை முறை, பணிச்சூழல் மற்றும் நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை குடும்பக் கட்டுப்பாடு மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட முக்கியக் காரணங்களாக விளங்குகின்றன.

மருத்துவ மற்றும் நிதி நெருக்கடிகள் தவிர, எண்டோமெ்கிரியோசிஸ் போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.