கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் சிறுவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தவறுதலாக சுமார் 500 பதின்ம வயது உடையவர்களுக்கு வாக்காளர் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
18 வயதிற்கும் குறைந்தவர்களுக்கு இவ்வாறு வாக்காளர் அட்டைகள் தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு எங்கு? எப்போது? வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த தகவல்கள் உள்ளடக்கிய அட்டைகள் வழங்கப்படும்.
18 வயதிற்கும் குறைந்த பதின்ம வயது உடையவர்களுக்கு இந்த அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த தவறு உடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறித்த நபர்களுக்கு கடிதம் மூலம் இந்த தவறு குறித்து அறிவிக்கப்பட்டதாகவும் தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த வாக்காளர் அட்டைகளை கொண்டு வாக்களிப்பில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் வாக்களிப்பிற்கு செல்லும் போது அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவே இந்த சிறுவர்களினால் வாக்களிப்பில் பங்கேற்க முடியாது அறிவிக்கப்பட்டுள்ளது.