கனடாவில் டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்பட்டுள்ளது.
டொரன்டோ போலீஸ் சேவை இந்த மதுபான சாலையை மூடுவதாக அறிவித்துள்ளது.
டொரன்டோ போலீஸ் தலைமையகத்தில் அனுமதி பெற்ற மதுபான சாலை இயங்கி வருகின்றது.
இந்த மதுபான சாலையின் ஊடாக சிரேஸ்ட போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு மதுபானம் விற்கப்பட்டது.
மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்து
அண்மையில் சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்துக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் தலைமையகத்தில் இயங்கி வந்த மதுபான சாலையை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுபான சாலையை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரத்தை நீடிப்பதில்லை என நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த மதுபான சாலை இயங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் போது நடைபெறும் பிரியாவிடை நிகழ்வுகள் மற்றும் விசேட பிரமுகர்களுக்கு வழங்கப்படும் விருந்துபசாரங்களின் போது இந்த அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி மதுபானம் வழங்கப்பட்டு வந்தது.
எனினும் உயர் அதிகாரிகள் இந்த அனுமதி பத்திர சலுகையை பயன்படுத்துவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமையிலினால் மதுபான சாலையை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனம் ஒன்றின் அரசாங்க கட்டிடத்தில் மதுபான சாலை இயங்குவது வழமைக்கு மாறான விடயம் என டொரன்டோ நகரின் முன்னாள் மேயர் ஜோன் ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காவல்துறை போலீஸ் உயரதிகாரி ஒருவர் விபத்து மேற்கொண்ட போது நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர் குறித்த மதுபான சாலையில், மது அருந்தி இருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து போலீஸ் தலைமையகத்தில் மதுபான விற்பனை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.