கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சிசு ஒன்றை படுகொலை செய்ததாக ஆண் ஒருவர் மீதும் பெண் ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பழங்குடியின சமூகத்தினர் வாழும் மனிடோலியன் தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிசு ஒருநாள் சிகிச்சையின் பின்னர், உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 33 வயதான பெண் மற்றும் 34 வயதான ஆண் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இருவரும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் கொலை குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கவனயீனமாக செயல்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகளை வழங்க தவறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இருவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிசுவிற்கும் இந்த இருவருக்கும் இடையிலான உறவு என்ன என்பது பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.