Reading Time: < 1 minute

கனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரம்டன் நகர நிர்வாகம், மத்திய அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரம்டனில் சர்வதேச மாணவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையம், பிரதான அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் பிரம்டனில் நகரில் காணப்படுகின்றன.

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் தங்கியிருக்கும் நகரமாக பிரம்டன் காணப்படுகின்றது என நகர மேயர் பெற்றிக் பிறவுண் தெரிவித்துள்ளார்.

சிலர் இணைய வழியில் சர்வதேச மாணவர்களை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் பதிவுகளை இடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு பிரதியுபகாரமாக மாணவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.