Reading Time: < 1 minute

கனடாவில் சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர்.

அண்மையில் மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றுவதாக அறிவித்திருந்தது.

குறிப்பாக மாணவர் வீசா தொடர்பில் கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக சர்வதேச மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களில் கற்று வரும் மாணவர்கள் இந்த நெருக்கடியினால் தங்களது கல்வியை உரிய முறையில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வீசா வழங்குவதில் காணப்படும் தாமத நிலைமைகளினால் மாணவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் தங்களது கல்வி ஆண்டுக்கான கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

வீட்டுப் பிரச்சினை தங்குமிட பிரச்சினை போன்ற காரணிகளினால் மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் வீசாக்களை வரையறுக்க தீர்மானித்திருந்தது.

இதனால் அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.