Reading Time: < 1 minute
கனடாவில் சமூக ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பாடசாலை சபைகளினால் முன்னணி சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் நான்கு பிரதான பாடசாலை சபைகள் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளன.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டொக் மற்றும் ஸ்னெப்செட் ஆகிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சமூக ஊடகங்கள் சிறுவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும் வகையில் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களினால் சிறுவர்களின் சந்தனை ஆற்றல் மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.