Reading Time: < 1 minute

கனடாவில் சமையல்காரராக பணிபுரிந்து வந்தவருக்கு அதிர்ஷ்டலாபத்தில் ஒரு மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ள நிலையில் அவர் சொந்தமாக உணவகம் தொடங்கவுள்ளார்.

வியட்நாமை சேர்ந்தவர் வின் டிரான் என்பவர் கனடாவின் பிரிற்றிஸ் கொலம்பியா மாகாணத்தில் வசித்து வருகிறார்.

அங்குள்ள உணவகத்தில் வின் டிரான் சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். அதிர்ஷட ரிக்கெற்றுகள் வாங்கும் பழக்கம் கொண்ட வின் டிரான் கடந்த மாதம் லோட்டோ 6/49 அதிர்ஷ்டப் போட்டியில் பங்கேற்ற நிலையில் அவருக்கு ஒரு மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் வின் டிரான் ஆழ்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், சமையல்காரனாக இருந்த நான் சொந்தமாக உணவகம் தொடங்கவுள்ளேன். ஆமாம், நான் உணவகத்தின் உரிமையாளராக ஆகவுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

எனக்கு இவ்வளவு பெரிய பரிசு அதிர்ஷ்டத்தில் விழுந்ததை என்னால் முதலில் நம்ப முடியவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பர் தான் பரிசு விழுந்த விடயத்தை முதலில் என்னிடம் தெரிவித்தார்” எனக் கூறியுள்ளார்.

கனடாவில் அவர் வியாட்நாமிய பாரம்பரிய உணவகத்தை தொடங்கவுள்ளாராம்.