Reading Time: < 1 minute
கனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
கடந்த ஒரு தசாப்த காலமாக சட்டவிரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்கள தகவல்களின் பிரகாரம் இந்த விடயம் உறுதியாகி உள்ளது.
கனடாவில் பதிவான சுமார் அரைவாசிக்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிராத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் பல்வேறு சவால்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அநேகமான சம்பவங்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 4500 சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.