கனடாவில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூனியர் கல்லூரி மாணவி கொல்லப்பட்ட வழக்கில் கியூபெக் மாகாண பொலிசார் தற்போது அதிரடி திருப்பமாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
கியூபெக் மாகாணத்தின் Saguenay பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 19 வயதேயான Guylaine Potvin என்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார். சக மாணவிகள் இருவருடன் Guylaine Potvin அந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
ஆனால் சம்பவம் நடக்கும் போது, அந்த குடியிருப்பில் Guylaine Potvin தனியாக இருந்துள்ளார். கடந்த 2,000 ஆண்டு ஏப்ரல் 28ம் திகதி Guylaine Potvin சடலம் மீட்கப்பட்டது. ஆனால் நீண்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார்,
Granby பகுதியை சேர்ந்த 47 வயது Marc-André Grenon என்பவரை கைது செய்துள்ளனர். அவர் மீது முதல் நிலை கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், பலாத்கார வழக்கும் பதிந்துள்ளனர்.
மட்டுமின்றி, 2,000 ஆண்டு ஜூலை மாதம் நடந்த கொலை வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதில், இரு கொலைகளும் ஒரே பாணியில் அமைந்திருப்பதை அடுத்தே பொலிசார் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.