Reading Time: < 1 minute

வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு எதிராக நட்டஈடு கோரிய வழக்கு தொடர்ந்த பெண், அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் ஒருவர் வீட்டின் மேல் மாடியில் தங்கி இருந்த அயலவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

லிண்டா பூ என்ற பெண் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் லொரென்ஸோ புரூனோ என்பவருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

மேல் மாடியில் வசிப்பவர்கள் அதிக சத்தம் எழுப்புவதனால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் தமக்கு நட்ட ஈடாக 5000 டாலர்கள் வழங்க வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிவில் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

5000 டொலர் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்த லிண்டா வூ, வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் புரூனோவிற்கு நட்ட ஈடாக 50 டாலர்களை செலுத்துமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

லின்டாவினால், புருனோவிற்கு எதிராக 300 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாடியில் தங்கி இருப்பவர்கள் தளவாடங்களை இழுப்பதன் மூலமாகவும், விருந்தினர்களை அழைத்து பேசுவதன் மூலமாகவும் இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தும் போதும் இவ்வாறு சத்தம் எழுவதாகவும் இது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் லிண்டா தெரிவித்திருந்தார்.

லிண்டா சத்தம் எழுவதாக பதிவு செய்து நீதிமன்றிற்கு வழங்கிய ஒலிப்பதிவுகளிலும் பாரிய சத்தம் எதுவும் கேட்கவில்லை என தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.

புருனோ சத்தம் எழுப்புவதாக கூறி லிண்டா பதிலுக்கு சத்தம் எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லிண்டா சத்தம் எழுப்பியது தொடர்பிலான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக புருனோவிற்கு 50 டாலர்கள் செலுத்துமாறு லிண்டாவிற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.