Reading Time: < 1 minute
கோவிட்19 சட்டங்களை மீறிச் செயற்பட்ட கனடிய மக்கள் கட்சியின் தலைவர் மெக்ஸிம் பர்னியருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
கோவிட் சட்டங்களை மீறியதாக ஒப்புக்கொண்ட பர்னியருக்கு நீதிமன்றம் இரண்டாயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் மானிடோபாவில் பர்னியர் கோவிட் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கூட்டங்களை நடத்தியதனால் பர்னியரை பொலிஸார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுச் சுகாதார சட்டத்தின் இரண்டு சரத்துக்களை தாம் மீறியதாக பர்னியர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக பர்னியர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.