Reading Time: < 1 minute
கனடாவில் கிட்சினர் நகரில் உள்ள சிறையில் தண்டனை அனுபவித்து வந்த வயதான பெண் உயிரிழந்துள்ளார்.
கனடாவின் ஒன்றாறியோவின் கிட்சினர் நகரில் உள்ளது Grand Valley Institution. இது பெண்கள் சிறையாகும்.
இந்த சிறையில் 83 வயதான மூதாட்டி ஒருவர் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார். கொலை வழக்கில் சிக்கிய அப்பெண் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த 1993ஆம் ஆண்டு ஜனவரி 19ல் தீர்ப்பளித்தது.
அன்றிலிருந்து அந்த சிறையில் தான் அவர் தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் சிறையிலேயே உயிரிழந்தார்.
இயற்கையான முறையில் அவர் உயிரிழந்தார் என்று Correctional Service கனடா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கைதியின் மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.