Reading Time: < 1 minute

கனடாவில் ஒட்டாவா புறநகர் பகுதியில் செனகல் தூதரக அதிகாரி ஒருவர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் செனகல் அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மிகவும் கவலை அளிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் செனகல் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், நடந்தது எதுவும் வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் தூதுவர் ஒட்டாவாவில் அமைந்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தூதரகத்தில் பணிபுரிபவர் எனவும் ஆகஸ்டு 2ம் திகதி Gatineau பகுதியில் உள்ள அவரது குடியிருப்பின் அருகாமையில் தடுத்து வைக்கப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் எனவும் செனகல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைவிலங்கிடப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், ஒருகட்டத்தில் மூச்சுவிட முடியாமல் குறித்த பெண் திணறியதாகவும், இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்தாலையே கடுமையாக நடந்து கொள்ளும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டதாக Gatineau பொலிசார் தெரிவித்துள்ளனர்.