கனடாவில் நண்பர்கள், உறவினர்கள் என இணைந்து வீடு கொள்வனவு செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
வட்டி வீத அதிகரிப்பு விலை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் வீடு கொள்வனவு செய்வதில் மக்கள் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான ஓர் பின்னணியில் தற்பொழுது கூட்டாக இணைந்து வீடுகளை கொள்வனவு செய்யும் கலாச்சாரம் உருவாகியுள்ளது.
றோயல் லீபேஜ் என்னும் வீட்டுத் தரகு நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சுமார் ஆறு வீதமானவர்கள் இவ்வாறு கூட்டாக இணைந்து வீடு கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைத் துணை தவிர்ந்த வேறும் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் இணைந்து இவ்வாறு வீடு கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கூட்டாக வீடுகளை கொள்வனவு செய்வோரில் 89 வீதமானவர்கள் குடும்ப உறவினர்கள் எனவும், 7 வீதமானவர்கள் நண்பர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடுகளை தனித்து கொள்வனவு செய்யக்கூடிய இயலுமை குறைந்த காரணத்தினால் இவ்வாறு வீடுகள் கூட்டாக இணைந்து கொள்வனவு செய்பய்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.