கனடாவில் குளிர்பானம் அருந்திய ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவில் இவ்வாறு வைத்தியசாலை அனுமதிகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாவரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட குளிர்பான வகைகளை அருந்திய சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த குளிர்பான வகைகளை சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த பானத்தை அருந்திய ஐந்து பேர் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் கிரண் மோர் தெரிவித்துள்ளார்.
சில்க் (Silk®) மற்றும் கிரேட் வெளியூர் (Great Value) என்ற பண்டக்குறியை கொண்ட குளிர்பான வகைகளை அருந்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஒருவகையிலான நுண்ணங்கிகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.