கனடாவின் றொரன்டோவில் எதிர்வரும் மாதம் கிறிஸ்மஸ் தாத்தாவின் நிஜ ஊர்வலம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்நிலையில் இந்த ஊர்வலம் நடாத்தப்பட்டது.
இம்முறை 118 தடவையாக கிறிஸ்மஸ் தாத்தாவின் நிஜ ஊர்வலம் றொரன்டோவில் நடைபெறவுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த நிகழ்வாக இந்த நிகழ்வு கருதப்படுகின்றது.
காண்போரைக் கவரும் வகையில் மிக பிரமாண்டமான முறையில் இந்த சான்டா க்ளோஸ் ஊர்வலம் றொரன்டோ நகரில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி இந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1905ம் ஆண்டு இந்த ஊர்வலம் முதன் முதலாக நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வட அமெரிக்காவில் நடைபெறும் மிகப் பெரிய ஊர்வலங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு கருதப்படுகின்றது.
கிறிஸ்மஸ் தாத்தாவின் நிஜ ஊர்வலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரையும் மகிழ்ச்சிப்படுது;தும் வகையில் அமைந்திருக்கும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்