Reading Time: < 1 minute

கனடாவில் கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் கார் திருட்டை தடுப்பதற்கு அரசாங்கம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலிஸ் பிரிவுகளுக்கு இடையில் தகவல்களை பரிமாறிக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வாகனத் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

களவாடப்பட்ட வாகனங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதனை தடுக்க விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன திருட்டை கட்படுப்படுத்தும் நோக்கில் தேசிய மாநாடு ஒன்றையும் அரசாங்கம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.