Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள டிம்மின்ஸ் (Timmins) நகரில் காணாமல் போயிருந்த 25 வயதான இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

இந்தியாவின் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள கும்பநாடு பகுதியைச் சேர்ந்த கெவின் சாபு (Kevin Sabu) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நவம்பர் 16ஆம் திகதி, காணாமல் போயிருந்த கெவினைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை டிம்மின்ஸ் பொலிஸார் கோரியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் திகதி அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்திருந்த போதிலும், அவரது நிலை குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், கெவின் உயிரிழந்துள்ளதாக நவம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அவரது உடலை சொந்த ஊரான கேரளாவுக்குக் கொண்டு சென்று இறுதிக்கிரியைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.