Reading Time: < 1 minute

கனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் நபர் ஒருவர் கரடியின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிர் தப்பியுள்ளார்.

திகிலூட்டும் இந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கி உயிர் பிழைக்க கிடைத்தமை அதிர்ஷ்டவசமானது என தாக்குதலுக்கு இலக்கான நபர் தெரிவிக்கின்றார்.

வெலேஸ் இங்கிலாந்து என்ற நபரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

ஹாலிபெக்ஸ் பகுதியின் சேர்வாட்டர் பிளையர் பாதையில் அதிகாலை நேரத்தில் சென்றபோது இந்த கரடி தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

கரடி தாக்குதல் குறித்து அறிந்து கொண்ட வனவள பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர்.

எனினும், அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல்களின் போது கரடியை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் குறித்த நபருக்கு எவ்வாறு காயங்கள் ஏற்பட்டன என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரிய கருப்பு கரடி ஒன்று தம்மை தாக்கியதாக இங்கிலாந்து தெரிவிக்கின்றார்.

கரடி தமது நெஞ்சு பகுதியில் பாய்ந்து தாக்கியதாகவும் தலையைத் தாக்கியதாகவும் தம்மை தூக்கி எறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தடவை அன்றி இரண்டு தடவைகள் இந்த கரடி தம்மை தாக்கியதாக அவர் தெரிவிக்கின்றார்.

இங்கிலாந்து என்பவரின் கைகள் முகம் கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம் பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.