Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மிட்லண்டில் நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய 39 வயதுடைய நபர் ஒருவர் கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

சனிக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் கிங் வீதியில் அமைதியின்மை நிலவுவதாகக் கிடைத்த தகவலையடுத்து தெற்கு ஜோர்ஜியன் பே ஒன்ராறியோ மாகாண பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸார் அங்கு சென்ற போது, வீதியில் கத்திக்குத்து காயங்களுடன் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் கிடந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

அவசரகால மருத்துவப் பணியாளர்களால் மீட்கப்பட்ட காயமடைந்த நபர், உடனடியாக உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திலேயே சந்தேகநபரைக் கைது செய்த பொலிஸார், அவர் மீது கொலை முயற்சி மற்றும் கொடூரமான தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.