Reading Time: < 1 minute

கனடாவில் ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக, அதாவது 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு படுகொலை வீதம் உயர்வடைந்துள்ளதாக ஸ்டேட் கேனின் புதிய தரவுகள் காட்டுகின்றன.

2020ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொலிஸாரின் அறிக்கையிடப்பட்ட குற்றங்கள் குறைந்துவிட்டதாக ஸ்டேட் கேன் குறிப்பிட்டது,.

ஆனால் கொவிட்-19 தொற்றுநோயுடன் இணைக்கப்பட்ட முடக்கநிலைகளால் ஏற்படும் சமூக அழுத்தங்கள் சில வகைகளில் உயர்வுக்கு வழிவகுத்தன.

கனேடிய பொலிஸ் படைகள் 2020இல் மொத்தம் 743 கொலைகளைப் பதிவு செய்துள்ளன. இது 2019இல் 687ஆக இருந்தது. கொலை வீதம் 100,000 பேருக்கு 1.95ஆக அதிகரித்துள்ளது. 15 ஆண்டுகளில் அதிகபட்சமாக, 2019இல் 100,000 பேருக்கு 1.83ஆக இருந்தது.

100,000 மக்கள்தொகைக்கு 2.69 கொலைகள் என்ற 1991இல் இருந்தது. இது கனடாவில் 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான கொலைகள் ஆகும்.